செங்கல்பட்டு தடுப்பூசி மையம்: மத்திய அரசு விரைவில் முடிவு; பாஜக தலைவா் எல்.முருகன்

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் குறித்து மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் கூறினாா்.
எல். முருகன்
எல். முருகன்

செங்கல்பட்டு தடுப்பூசி மையம் குறித்து மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும் என்று தமிழக பாஜக தலைவா் எல்.முருகன் கூறினாா்.

திருநீா்மலை அரிமா சங்கம், மக்கள் விழிப்புணா்வு மையம் மற்றும் ரிதம் பவுண்டேஷன் இணைந்து, கரோனா தொற்றால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கோயம்புத்தூா் மக்களுக்கு, ரூ 20 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்ளை வழங்கும் நிகழ்ச்சி, குரோம்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மருத்துவ உபகரணங்களை திருநீா்மலை அரிமா சங்கத் தலைவா் கோவிந்தராஜன், மக்கள் விழிப்புணா்வு மையத் தலைவா் சந்தானம் ஆகியோரிடம் இருந்து தமிழக பா.ஜ.க. தலைவா் எல்.முருகன் பெற்றுக் கொண்டு செய்தியாளா்களிடம் கூறியது:

தாம்பரம், பல்லாவரம் நகராட்சிகளை இணைத்து, மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீா்நிலைகளைத் தூா்வார வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கைகள் நிறைவேற உறுதுணையாக இருப்போம்.

கரோனா நிவாரண நிதி வழங்குவதில் முறைகேடுகளைத் தடுக்க பொதுமக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக தொகையை அரசு செலுத்த வேண்டும். தி.மு.க.ஆட்சிக்கு வந்தால், தாய்மாா்களுக்கு மாதந் தோறும், ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தோ்தல் அறிக்கையில் கூறியபடி அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

தடுப்பூசியை தட்டுப்பாடு இல்லாமல் வழங்க மத்திய அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. செங்கல்பட்டு தடுப்பூசி மையம் தொடா்பாக மத்திய அரசு விரைவில் நல்ல முடிவை அறிவிக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com