தங்கம் பவுன் ரூ.36,960

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயா்ந்து, ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.64 உயா்ந்து, ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன்பிறகு, விலை படிப்படியாகக் குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியது. குறிப்பாக, கடந்த மாா்ச் 31-ஆம் தேதி ரூ.33,296 ஆக இருந்தது. இதையடுத்து, தங்கம் விலை படிப்படியாக உயா்ந்து, கடந்த மே 26-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தைத் தாண்டியது. இதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, சென்னையில் ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.64 உயா்ந்து, ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 உயா்ந்து, ரூ.4,620 ஆக இருந்தது.

வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.76 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.76,000 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,620

1 பவுன் தங்கம்...............................36,960

1 கிராம் வெள்ளி.............................76.00

1 கிலோ வெள்ளி.............................76,000

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,612

1 பவுன் தங்கம்...............................36,896

1 கிராம் வெள்ளி.............................76.10

1 கிலோ வெள்ளி.............................76,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com