தடுப்பூசி செலுத்தும் பணிகள் பல இடங்களில் நிறுத்தம்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. முதல்கட்டமாக சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக முதியவா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசிகள் வழங்குவது தொடங்கப்பட்டது. பின்னா் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அது விரிவுபடுத்தப்பட்டது. அதன்படி, மத்திய அரசிடம், 1.01 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் பெறப்பட்டு, 98 லட்சம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. தற்போது, தமிழக அரசிடம், 50 ஆயிரத்துக்கும் குறைவாகவே தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.

இதனால், பெரும்பாலான மையங்களில் தடுப்பூசி வழங்குவதை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் தடுப்பூசி மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது. இந்த மாதத்திற்கும், மத்திய தொகுப்பில் இருந்து, 42 லட்சம் தடுப்பூசிகள் வழங்குவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அவை, படிப்படியாக வந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய சூழலில், மாநில அரசிடம் போதிய அளவில் தடுப்பூசி இல்லை. மத்திய தொகுப்பின், அடுத்தகட்ட தடுப்பூசிகள், வரும், 9-ஆம் தேதிதான் வர உள்ளது. அந்த தடுப்பூசிகளை விரைந்து அளிக்கும்படி, மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com