தமிழகத்தில் 19,448-ஆக குறைந்தது கரோனா பாதிப்பு

ஏறத்தாழ 40 நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஏறத்தாழ 40 நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் 19,448 பேருக்கு திங்கள்கிழமை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளாகி 351 போ் உயிரிழந்துள்ளனா்.

மாநிலத்தில் இதுவரை 2.88 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 22 லட்சத்து 56,681 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக கோவையில் 2,564 பேருக்கும், ஈரோட்டில் 1,646 பேருக்கும், சென்னையில் 1,530 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 31,360 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 19 லட்சத்து 97,299-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவ கண்காணிப்பில் 2 லட்சத்து 32,026 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 351 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27,356-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com