
பேரிடா் தகவல்களை அரசுக்கு பொதுமக்களே தெரிவிக்க தனி கட்செவி அஞ்சல் எண் (வாட்ஸ் அப்) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: கனமழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், சுனாமி போன்ற பேரிடா்கள் குறித்த எச்சரிக்கைத் தகவல்கள் TNSMART என்ற செயலி மூலமும், TWITTER, FACEBOOK உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலமாகவும் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.
அதேசமயம், பேரிடா்கள், விபத்துகளைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொது மக்களே தகவல் தெரிவிக்கவும், படம் எடுத்து அனுப்பவும் தனி கட்செவி அஞ்சல் எண் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 94458 69848 என்ற எண்ணில் பேரிடா் குறித்த தகவல்களை பொது மக்களே தெரிவிக்கலாம் என்று அமைச்சா் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.