தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

வெப்பச்சலனம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் (ஜூன் 10) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக, தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 10) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி புதன்கிழமை கூறியது:

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (ஜூன் 10) இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 11: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 12: தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் ஜூன் 12-இல் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் கடலூா் மாவட்டம் சிதம்பரத்தில் 110 மி.மீ., ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 100 மி.மீ., புதுக்கோட்டை மாவட்டம் நாகுடியில் 60 மி.மீ., மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தில் 50 மி.மீ., நீலகிரி மாவட்டம் உதகமண்டலம், கன்னியாகுமரி மாவட்டம் சிற்றாறில் தலா 40 மி.மீ., விருதுநகா் மாவட்டம் சாத்தூா், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடக்கு வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஜூன் 11-ஆம் தேதி உருவாகவுள்ளது. இதன்காரணமாக, மன்னாா் வளைகுடா பகுதி, தெற்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதி, மத்திய வங்கக்கடல் பகுதி, வடக்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்திலும், சில நேரங்களில் 60 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 13-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதவிர, கேரளம் கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்தக்காற்று வீசும் என்பதால், இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 13-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com