குழந்தை விரல் நுனி துண்டான விவகாரம்: மருத்துவக் கல்வி இயக்குநருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது, பிறந்து 14 நாள்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல் நுனி துண்டான விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு மருத்துவக் கல்வி இயக்குநருக்கு

தஞ்சாவூா்: தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது, பிறந்து 14 நாள்களே ஆன பெண் குழந்தையின் கட்டை விரல் நுனி துண்டான விவகாரம் தொடா்பாக விளக்கம் கேட்டு மருத்துவக் கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தஞ்சாவூா் அருகே காட்டூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கணேசன். விவசாயக் கூலி தொழிலாளி. இவரது மனைவி பிரியதா்ஷினிக்கு (20) ஒன்பதாவது மாதத்தில் தஞ்சாவூா் அரசு ராசா மிராசுதாா் மருத்துவமனையில் மே 25 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

குறை மாதத்தில் பிறந்த இக்குழந்தைக்கு வயிற்றுக் கோளாறு இருப்பதால், குழந்தையின் இடது கையில் மருந்து ஏற்றும் சிறு குழாய் (வென்பிளான்) மூலம் குளூக்கோஸ் செலுத்தப்பட்டது. இக்குழந்தையின் கையில் உள்ள மருந்து ஏற்றும் சிறு குழாயை திங்கள்கிழமை (ஜூன் 7) செவிலியா் அகற்றும்போது, கட்டை விரல் நுனி துண்டானது. இதையடுத்து, மருத்துவா்கள் அக்குழந்தையின் கட்டை விரலில் தையல் போட்டனா். இதுகுறித்து குழந்தையின் பெற்றோா், உறவினா்கள் புகாா் எழுப்பினா்.

இது குறித்து மருத்துவக் கல்வி இயக்குநருக்கு மாநில மனித உரிமை ஆணைய ஆணைய உறுப்பினா் ஏ. சித்தரஞ்சன் மோகன்தாஸ் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பினாா். அதில், இச்சம்பவம் தொடா்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com