சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள்

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 
ககன்தீப் சிங் பேடி
ககன்தீப் சிங் பேடி

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 21 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவத்தொடங்கியது. தமிழக அரசின் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளின் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொவைட் தொற்று பாதித்த நபர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தொற்று பரவலை கட்டுபடுத்தவும் மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முதற்கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், பின்னர் 45 வயதிற்கு மேற்பட்ட இணைய நோயுள்ள நபர்களுக்கும், அதனைத் தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இத்துடன் மருத்துவ பணியாளர்கள், முன் களப்பணியாளர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்ட பணியாளர்கள் என முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.
தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் தடுப்பூசி வழங்கலாம் என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ள நிலையில் தற்போதைய தடுப்பூசி இருப்பினை கருத்தில்கொண்டு தமிழக அரசு 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் நபர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
மேற்குறிப்பிட்ட தடுப்பூசி முகாம்களின் வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுநாள்வரை 15 லட்சத்து 59 ஆயிரத்து 783 (15,59,783) நபர்களுக்கு முதல் தவணைத் தடுப்பூசியும், 5 லட்சத்து 86 ஆயிரத்து 897 (5,86,897) நபர்களுக்கு இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 09.06.2021 வரை 21 லட்சத்து 46 ஆயிரத்து 680 (21,46,680) தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு விலையில்லாமல் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 45 வயதிற்கு மேற்பட்டவர்களில் தடுப்பூசி செலுத்திய சதவீதம் 66.31 ஆகும்.
கோயம்பேடு வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு தடுப்பூசி முகாமில் இதுவரை வியாபாரிகளுக்கு 8239 கொவைட் தடுப்பூசிகளும், காசிமேடு மீன்பிடி துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்ட தடுப்பூசி சிறப்பு முகாமில் வியாபாரிகளுக்கு 2143 தடுப்பூசிகளும், சிந்தாதிரிப்பேட்டையில் அமைக்கப்பட்ட சிறப்பு மருத்துவ முகாமில் 89 தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகங்களில் கோவிட் தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் வியாபாரிகளுக்கு தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படும் என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com