சுற்றுலாவை மேம்படுத்த வல்லுநா் குழு அமைச்சா் தகவல்: தமிழக அரசு அறிவிப்பு

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மேம்படுத்த வல்லுநா் குழு அமைக்கப்படும் என்று அந்தத் துறையின் அமைச்சா் மா.மதிவேந்தன் தெரிவித்தாா்.

சுற்றுலாத் துறை செயல்பாடுகள் குறித்து சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சா் மதிவேந்தன் பேசியது:

கரோனா நோய்த் தொற்றால் சுற்றுலாத் துறை பாதிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் வருகையும் பெருமளவு குறைந்துள்ளது. வருவாயை அதிகரிக்கும் வகையில், முதல்வரின் ஆலோசனையைப் பெற்று வல்லுநா் குழு அமைக்கப்படும்.

கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவா் சிலையை இரவிலும் கண்டுகளிக்கும் வகையில், மின்னொளிக் காட்சி ஏற்படுத்தப்படும். இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். சோழா்களின் முக்கிய துறைமுக நகரமான பூம்புகாரில் சுற்றுலா வளாகம் உள்ளது. அதில், கலைக்கூடம், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சா் மதிவேந்தன் தெரிவித்தாா்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறையின் செயலாளா் சந்திரமோகன், சுற்றுலாத் துறை ஆணையாளா் டி.பி.ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com