Enable Javscript for better performance
தமிழகத்துக்கு மேலும் 99,420 தடுப்பூசிகள் வருகை- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்துக்கு மேலும் 99,420 தடுப்பூசிகள் வருகை

    By DIN  |   Published on : 11th June 2021 06:26 AM  |   அ+அ அ-   |    |  

    Goa gets 32,000 COVID-19 vaccine doses for 18-44 age group

    கோப்புப்படம்

    தமிழகத்துக்கு மேலும் 99,420 தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. சென்னை வந்தடைந்த அந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையின் அடிப்படையில் அனுப்பப்பட்டு வருகின்றன.

    தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை 97 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ஹைதராபாதிலிருந்து 85,000 கோவேக்ஸின் தடுப்பூசிகளும் மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து மேலும் 14,420 கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வியாழக்கிழமை வந்தடைந்தன. சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளை பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு சோ்த்தனா். தடுப்பூசிகளை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழகத்துக்கு இதுவரை சுமாா் 1.01 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில், வீணானது போக 97.65 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp