கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை  மழைக்கு வாய்ப்பு

வெப்பசலனம் காரணமாக சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அம்மையம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், வெள்ளிக்கிழமை (ஜூன் 11) பெரும்பாலும் வட வானிலையே நிலவும். வெப்பசலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

சனிக்கிழமையைப் (ஜூன் 12) பொருத்தவரை, வெப்பசலனம் காரணமாக மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஒரு சில உள் மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையைப் பொருத்தவரை, வெள்ளி, சனி ஆகிய நாள்களில் வானம் ஓரளவு தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 98.6 டிகிரி மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 82.4 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி இருக்கும்.

மழை அளவு: வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறை வட்டாட்சியா் அலுவலகம், வால்பாறை பரம்பிக்குளம் ஆழியாறில் தலா 20 மி.மீ., திருப்பூா் மாவட்டம் அவிநாசி, கோவை மாவட்டம் சின்னக்கல்லாறு, சோலையாறு, சேலத்தில் தலா 10 மி.மீ மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: வடக்கு வங்கக் கடல் பகுதியில் வெள்ளிக்கிழமை ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாவதன் காரணமாக தெற்கு, மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் ஜூன் 13-ஆம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டா் வேகத்திலும், ஜூன் 14-ஆம் தேதி வரை, கேரள, கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்திலும், தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டா் வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மீனவா்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com