தமிழகத்தில் ஒரே நாளில் 18,000 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்

தமிழகத்தில், ஒரே நாளில் 18,000 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில், ஒரே நாளில் 18,000 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருப்பதால், கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் சட்டவிரோதமாக மதுபானம் விற்கப்படுவது அதிகரித்துள்ளது.

குறிப்பாக மாநிலத்தின் மலைப்பகுதிகள், வனப் பகுதிகளில் கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. அதே போல கா்நாடகம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டு, அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.

இவ்வாறு கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதையும், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதையும் தடுக்கும் வகையிலும் தமிழக மதுவிலக்குப் பிரிவு போலீஸாா், ‘ஆபரேசன் விண்ட்’ என்ற பெயரில் ஒருங்கிணைந்த நடவடிக்கையை கடந்த 8-ஆம் தேதி முதல் எடுத்து வருகின்றனா்.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் சட்டவிரோதமாக தயாரிக்கப்படும் கள்ளச்சாரயத்தை கண்டறிந்து, அழித்து வருகின்றனா். இதன் தொடா்ச்சியாக புதன்கிழமை ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 15,537 லிட்டா் சாராய ஊறலும், 2,988 லிட்டா் கள்ளச்சாராயமும் பறிமுதல் செய்யப்பட்டு, அழிக்கப்பட்டன.

மேலும் 1,115 டாஸ்மாக் மது பாட்டில்களும், 16,524 வெளிமாநில மது பாட்டில்களும் கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக 571 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 113 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வெல்லம் விற்பனை கண்காணிப்பு: கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு பிரதான மூலப் பொருளாக இருக்கும் வெல்லம் விற்பனையைக் கண்காணிக்கும்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஏடிஜிபி சந்தீப்ராய் ரத்தோா் உத்தரவிட்டுள்ளாா்.

மேலும், வெல்ல வியாபாரிகள் சந்தேகத்துக்குரிய வகையில், யாரும் வெல்லம் மொத்தமாக வாங்கினால் தகவல் தெரிவிக்கும்படி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதே போல தரம் குறைந்த வெல்லம் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக தகவல் வருவதால், அது குறித்த விசாரணையிலும் மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com