சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைப்பு

சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சீர்காழி ரயில் நிலையத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள்.
சீர்காழி ரயில் நிலையத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் நெல் மூட்டைகள்.

சீர்காழி: சீர்காழி ரயில் நிலையத்திலிருந்து 2000 டன் நெல் மூட்டைகள் ரயில் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விவசாயிகளிடம் கடந்த மார்ச் மாதம்  கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் வாங்கப்பட்டு சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டன. 

இந்நிலையில், மேற்கண்ட பகுதிகளில் இருந்து நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சீர்காழி ரயில் நிலையம் கொண்டு வரப்பட்டு, இங்கிருந்து அரவைக்காக தர்மபுரிக்கு ரயில் மூலம் அனுப்பும் பணி நடைபெற்றது. 

சீர்காழி, மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து 2,000 டன் கொண்ட 49 ஆயிரத்து 600 நெல் மூட்டைகள் 42 ரயில் பெட்டிகள் மூலம் தர்மபுரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com