அண்ணாநகர் தவிர்த்து பிற மண்டலங்களில் 1000-க்கும் கீழ் குறைந்த பாதிப்பு

சென்னையில் அண்ணாநகரைத் தவிர பிற அனைத்து மண்டலங்களிலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1000-க்கும் கீழ் குறைந்துள்ளது.
அண்ணாநகர் தவிர்த்து பிற மண்டலங்களில் 1000-க்கும் கீழ் குறைந்த பாதிப்பு
அண்ணாநகர் தவிர்த்து பிற மண்டலங்களில் 1000-க்கும் கீழ் குறைந்த பாதிப்பு

சென்னை: சென்னையில் அண்ணாநகரைத் தவிர பிற அனைத்து மண்டலங்களிலும் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 1000-க்கும் கீழ் குறைந்துள்ளது. மேலும், சனிக்கிழமை காலை நிலவரப்படி மொத்த நோயாளிகள் எண்ணிக்கை 10 ஆயிரமாகக் குறைந்துள்ளது. 

தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் காரணமாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களும் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து வேகமாக மீண்டு வருகின்றன.

சென்னையில் கடந்த மாதம் நாளொன்றுக்கு சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 1,500-த்துக்கு கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 23,123-ஆக அதிகரித்துள்ளது. 5 லட்சத்து 04,561 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 10,842 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அண்ணாநகரைத் தவிர்த்து பிற மண்டலங்கள் அனைத்தைலும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1000க்கும் கீழ் குறைந்துள்ளது. சென்னையில் அண்ணாநகரில் மட்டும் 1021 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். 

கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மே 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com