இது இரண்டு மடங்கு: புதுவையில் 3 நாள்களில் ரூ.20.4 கோடிக்கு மது விற்பனை

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.20.4 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது. இது வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.
இது இரண்டு மடங்கு: புதுவையில் 3 நாள்களில் ரூ.20.4 கோடிக்கு மது விற்பனை
இது இரண்டு மடங்கு: புதுவையில் 3 நாள்களில் ரூ.20.4 கோடிக்கு மது விற்பனை

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில், கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.20.4 கோடிக்கு மதுபான விற்பனை நடந்துள்ளது. இது வழக்கமாக விற்பனையாகும் மதுபானங்களை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

புதுவையில் கூடுதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது. அன்று முதல், காா், ஆட்டோ, பேருந்துகள் இயங்கின. மதுக் கடைகள் உள்பட அனைத்துவிதமான கடைகளும் திறக்கப்பட்டன.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த ஏப்.23-ஆம் தேதி முதல் பகுதி நேர பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த மாதம் 10-ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொது முடக்கம் அமலில் இருந்தது. இந்தப் பொது முடக்கம் திங்கள்கிழமையோடு முடிவுக்கு வந்தது.

சுமார் ஒரு மாதத்துக்குப் பின்னா் பொதுமுடக்கத்தில் தளர்வு அறிவிக்கப்பட்டு, சாராயம், மதுக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கின. திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ரூ.7.4 கோடிக்கு மதுபான விற்பனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜூன் 9ல் ரூ.6 கோடிக்கும், ஜூன் 10ல் ரூ.7 கோடிக்கும் விற்பனையாகியுள்ளது. இது புதுச்சேரியில் வழக்கமாக நடைபெறும் மதுபான விற்பனையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், வழக்கமாக புதுச்சேரியில் நாள் ஒன்றுக்கு ரூ.3.5 கோடி முதல் ரூ.4 கோடி வரையிலான மதுபானங்கள் விற்பனையாகும். அனைத்து மதுபானக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் வழக்கத்தை விட இரண்டு மடங்கு அதிகமாக மதுபானங்கள் விற்பனையாகின்றன. 

தமிழகத்தில் மதுக் கடைகள் திறக்கப்படாததால், புதுச்சேரி மாவட்டத்தின் எல்லையோரப் பகுதிகளிலுள்ள மதுக் கடைகளில் தமிழகத்தைச் சோ்ந்த ஏராளமானோா் திரண்டு மதுப்புட்டிகளை வாங்கிச் செல்கின்றனர். இதன் காரணமாக, அந்தப் பகுதிகளில் மதுக் கடைகளில் கூட்ட நெரிசல் அதிகமாகக் காணப்படுவதையும் பார்க்க முடிகிறது. 

ஒரு பக்கம் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் மதுபுட்டிகளை வாங்கிச் செல்வதும், மீண்டும் பொதுமுடக்கம் அறிவித்து கடையை மூடிவிடுவார்களோ என்ற அச்சத்தில் பலரும் அதிகளவில் மதுபுட்டிகளை வாங்கிச் செல்வதுமே, இப்படி இரண்டு மடங்கு அதிகமாக மதுபான விற்பனைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

தமிழகத்தில் அடுத்த வாரம் முதல் அறிவிக்கப்பட்டிருக்கும் கூடுதல் தளர்வில், மதுபானக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com