மோடியை வரும் 17-ல் சந்திக்கிறார் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜூன் 17-ஆம் தேதி புது தில்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார்.
ஜூன் 17-ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
ஜூன் 17-ல் பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்


சென்னை: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஜூன் 17-ஆம் தேதி புது தில்லி சென்று அங்கு பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச உள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதல்வர் ஸ்டாலின் முதல் தில்லி பயணமாக இது அமைகிறது.

இதற்காக அவர் ஜூன் 16-ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்பட்டு தில்லி செல்ல உள்ளார். 17-ஆம் தேதி புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசிவிட்டு, அன்றைய தினமே சென்னை திரும்புகிறார்.

இந்த சந்திப்பின் போது, தமிழக முதல்வர் ஸ்டாலின் தரப்பில், தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை அளிக்கப்பட உள்ளது. ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்குதுல், மத்திய அரசு சார்பில் வழங்க வேண்டிய பல மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிலுவைத் தொகைகள், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்வது உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய அறிக்கை அளிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்துக்கு அதிகளவில் கரோனா தடுப்பூசியை ஒதுக்குவது, செங்கல்பட்டில் கரோனா தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலையை தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு  அம்சங்கள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்ந்து கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com