தமிழகத்துக்கு 3.65 லட்சம் கோவிஷீல்ட் வருகை

தமிழகத்துக்கு மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
கோவிஷீல்டு தடுப்பூசி
கோவிஷீல்டு தடுப்பூசி

தமிழகத்துக்கு மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. வெள்ளிக்கிழமை சென்னை வந்தடைந்த அந்த தடுப்பூசிகள் அனைத்து மாவட்டங்களுக்கும் தேவையின் அடிப்படையில் அனுப்பப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கின. இதுவரை 98 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் புணேவிலிருந்து மேலும் 3.65 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்தன. சென்னை விமான நிலையத்தில் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் குளிா்பதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில மருந்து சேமிப்பு கிடங்குக்கு உரிய பாதுகாப்புடன் கொண்டு சோ்த்தனா். தடுப்பூசிகளை மாவட்டங்களுக்குப் பிரித்து அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்துக்கு இதுவரை சுமாா் 1.02 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. அதில், 98 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அதிகபட்சமாக 3 நாள்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com