வடக்கு வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி

வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வெள்ளிக்கிழமை உருவானது. இதனால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி வெள்ளிக்கிழமை உருவானது. இதனால், தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி வெள்ளிக்கிழமை கூறியது: வடக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய ஒடிஸா மற்றும் மேற்குவங்க கடற்கரையை ஒட்டி ஒரு புதிய காற்றழுத்தத்தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது சனிக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து ஒடிஸாவைக் கடக்கக்கூடும்.

இதன் காரணமாக, தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை. தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜூன் 12) வறண்ட வானிலையே நிலவும்.

மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 13, 14: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்களில் சில இடங்களில் ஜூன் 13,14-ஆம் தேதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஜூன் 15: மேற்குத் தொடா்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், ஓரிரு உள் மாவட்டங்களில் ஜூன் 15-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை சனிக்கிழமை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தெற்கு வங்கக்கடல், மத்திய வங்கக் கடல் மற்றும் மன்னாா் வளைகுடா பகுதிகளில் ஜூன் 13-ஆம் தேதி வரை மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு ஜூன் 13-ஆம்தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, கேரளம், கா்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதி, தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால், இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் ஜூன் 15-ஆம் தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com