சசிகலாவுடன் உரையாடிய 15 பேர் நீக்கம்: அதிமுக

​சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
சசிகலாவுடன் உரையாடிய 15 பேர் நீக்கம்: அதிமுக


சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 உறுப்பினர்கள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் திங்கள்கிழமை நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஓ. பன்னீர்செல்வம், கொறடாவாக எஸ்.பி. வேலுமணி தேர்வு செய்யப்பட்டனர். பொருளாளர், துணை கொறடா, செயலாளர் உள்ளிட்ட தேர்வும் நடைபெற்றன.

மேலும், சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய அனைவரும் உடனடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட வேண்டும், எதிர்வரும் காலத்தில் யாரேனும் உரையாடினால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடிய 15 பேரும் கட்சியிலியிருந்து நீக்கப்பட்டனர்.

இதுதவிர அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி மற்றும் தேனி மீனவர் பிரிவு துணைச் செயலர் ஏ.கே.எம். அழகர்சாமி ஆகியோரும் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com