முக்கொம்பு வந்தது காவிரி தண்ணீர்: நாளை கல்லணை திறப்பு

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தது. 
மேட்டூரில் திறந்த தண்ணீர் முக்கொம்பு மேலணை வந்தது
மேட்டூரில் திறந்த தண்ணீர் முக்கொம்பு மேலணை வந்தது

திருச்சி: டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீரானது முக்கொம்புக்கு செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்தது. 

முக்கொம்பு மேலணைக்கு வந்த தண்ணீரை விவசாயிகள் மலர்கள் தூவியும், விதை நெல்களை தூவியும் உற்சாகத்துடன் வரவேற்றனர். பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பூஜைகள் செய்து காவிரியை வழிபட்டு டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை முழுவதுமாக காவிரியில் திறந்து அனுப்பினர்.

திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.

தண்ணீர் இருந்தால் தாளடியும் சேர்த்து மூன்று போகங்கள் சாகுபடி செய்யும் சூழல் இருந்தது. அதிமுக  அரசு பொறுப்பேற்றதும் 2011-ல் ஜூன் 6-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன்மூலம், டெல்டா மாவட்டங்களில் 3.4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதன் பிறகு கடந்த 9 ஆண்டுகளாக போதுமான நீர் இருப்பு இல்லாததால் குறுவை பாசனத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கவில்லை.

கடந்த 2020-ல் திட்டமிட்டபடி ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இப்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் இரண்டாவது ஆண்டாகவும் ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் முக்கொம்புக்கு செவ்வாய்க்கிழமை வந்து சேர்ந்து. இரவு கல்லணை செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதன்கிழமை காலை கல்லணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com