திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினித் பொறுப்பேற்பு

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினித் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினித் பொறுப்பேற்பு.
திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினித் பொறுப்பேற்பு.

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட ஆட்சியராக வினித் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த க.விஜயகார்த்திகேயன் அண்மையில் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணை மேலாண்மை இயக்குநராகப் பணியாற்றி வந்த வினித், திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆட்சியராக வினித் புதன்கிழமை பிற்பகலில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும். அதிலும் குறிப்பாக கரோனா பரிசோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பூர் மாவட்டத்துக்கு அதிக அளவில் தடுப்பூசி கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

இவர் கேரள சிவில் சர்வீஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று 2013 ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 36 ஆவது இடம் பிடித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தின் 7 ஆவது ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com