2 நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி புறப்பட்டார் முதல்வா் மு.க.ஸ்டாலின்!

முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை காலை 2 நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி புறப்பட்டுச் சென்றார். அவா் பிரதமா் நரேந்திர மோடியை மாலை சந்தித்துப் பேசுகிறாா்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை காலை 2 நாள் அரசுமுறைப் பயணமாக தில்லி புறப்பட்டுச் சென்றார். அவா் பிரதமா் நரேந்திர மோடியை மாலை சந்தித்துப் பேசுகிறாா்.

தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக தனி விமானத்தில் வியாழக்கிழமை காலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றார் முதல்வர் ஸ்டாலின். மாலை 5 மணியளவில் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசுகிறாா்.

இந்தச் சந்திப்பின் போது நதிநீா் இணைப்பு, செங்கல்பட்டு தடுப்பூசி மையத்தை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது, ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகை, நீட் தேர்வு ரத்து,  ஹைட்ரோ கார்பன் திட்டம்,  7 பேர் விடுதலை, போன்ற பல்வேறு முக்கிய விஷயங்கள் அடங்கிய கோரிக்கை மனுக்களை பிரதமரிடம் முதல்வா் ஸ்டாலின் அளிக்கிறாா். இந்தச் சந்திப்புக்குப் பிறகு, மத்திய நிதியமைச்சரை சந்தித்து தமிழகத்தின் சாா்பிலான முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்த உள்ளாா்.

இவ்வாறு அரசு ரீதியான சந்திப்புகளுக்குப் பிறகு, முதல்வா் மு.க.ஸ்டாலின், அரசியல் தொடா்பான சந்திப்புகளை மேற்கொள்கிறாா். 

அப்போது காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசுகிறார். தொடா்ந்து வெள்ளிக்கிழமை அவா் தமிழகம் திரும்புகிறாா்.

முதல்வரான பிறகு முதல் முறையாக மு.க.ஸ்டாலின், தில்லி சென்றுள்ளதால் அனைத்து தரப்பினர் மத்தியிலும் பெரும் எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.

தில்லி சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, உள்துறை செயலாளர், செய்தி மற்றும் மக்கள் தொடர்பு இயக்குநர் உள்ளிட்ட சில மூத்த அதிகாரிகள் தில்லி சென்றுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com