ரூ. 61.09 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம்: முதல்வர் அறிவிப்பு

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக ரூ 61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 
ரூ. 61.09 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்புத் திட்டம்: முதல்வர் அறிவிப்பு

டெல்டா மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக ரூ 61.09 கோடி மதிப்பீட்டில் குறுவை நெல் சாகுபடி தொகுப்புத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

டெல்டா மாவட்ட விவசாயிகள் குறுவை நெல்சாகுபடியில் உயர் மகசூல் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முக்கிய இடுபொருட்கள் மற்றும் வேளாண் இயந்திரங்களை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் வகையில் ரூ.61.09 கோடி மதிப்பில் குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் குறுவை சாகுபடி உதவி தொகுப்புத் திட்டமானது தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்கள் முழுவதும், கடலூர், அரியலூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளிலும் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக நடப்பாண்டில் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டதாலும், ரூ.61.09 கோடி மதிப்பில் அறிவிக்கப்பட்ட குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டத்தின் காரணமாகவும், குறுவை நெல் சாகுபடி இலக்கான 3 இலட்சத்து 50 ஆயிரம் ஏக்கரைவிட கூடுதலான பரப்பளவில் இந்த ஆண்டு சாகுபடி மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது. 

குறுவை நெல் சாகுபடித் திட்டம் குறித்த தமிழக அரசின் செய்திக்குறிப்பு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com