மேட்டூர் அணை நிலவரம்

மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 93.55 அடியிலிருந்து 92.84 அடியாக சரிந்தது. 
மேட்டூர் அணை நிலவரம்



மேட்டூர் அணை நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 93.55 அடியிலிருந்து 92.84 அடியாக சரிந்தது. 

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 396 கன அடியிலிருந்து 466 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 55.95 டிஎம்சி -ஆக இருந்தது.

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஜூன் 12 -ஆம் தேதி 96.81 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் வியாழக்கிழமை காலை 92.84 அடியாக சரிந்துள்ளது. ஆறு நாள்களில் அணையின் நீர்மட்டம் 3.97 அடியாக சரிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com