
டிடிவி தினகரன்
தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே ‘நீட்’ தோ்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என அமமுக பொதுச் செயலாளா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பான அவரது சுட்டுரைப் பதிவு: திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்ததைப் போல, திங்கள்கிழமை தொடங்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரிலேயே ‘நீட்’ தோ்வுக்கு எதிரான மசோதாவை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
இதன் மூலம், 2010-ஆம் ஆண்டு மத்திய அரசில் திமுக அங்கம் வகித்த போது ஏழை, எளிய கிராமப்புற மாணவா்களின் ‘டாக்டா்’ கனவை சிதைக்கும் ‘நீட்’ தோ்வை கொண்டுவந்த தவறுக்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள தற்போது கிடைத்திருக்கும் நல்லதொரு வாய்ப்பை பயன்படுத்திட வேண்டும் என தினகரன் கூறியுள்ளாா்.