வெறும் காலுடன் பேரவைக்கு வந்த பாஜக எம்எல்ஏ

வெறும் காலுடன் பேரவைக்கு வந்த பாஜக எம்எல்ஏ

நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் சட்டப்பேரவைக்கு வந்தார். 

நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்தி செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் சட்டப்பேரவைக்கு வந்தார். 

தெற்கு சூரங்குடி கீழமாவிலை ராஜாக்கமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்தவர் எம்.ஆர்.காந்தி. இவருக்கு 75 வயதாகிறது. பாரதிய ஜனசங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளில் திறம்பட செயல்பட்டவர். மிசா கால கட்டத்தில் ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தவர். திருமணமாகாதவர்.

1980-ம்ஆண்டில் இருந்து 6 முறை நாகர்கோவில், குளச்சல், கன்னியாகுமரி சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். 1996-ஆம் ஆண்டு பத்மநாபபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தமிழகத்தின் முதல் பாஜக எம்எல்ஏ என்ற பெருமை பெற்ற வேலாயுதத்துக்கு பின்னர் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர்.காந்திக்கு கிடைத்தது. 

எளிமையான அரசியல்வாதி என்று பெயரெடுத்தவர். நினைவு தெரிந்த நாள் முதல் காலணியே அணியாதவர். போதிய ஆதரவாளர்கள் இல்லாத நிலையில் வீடு, வீடாக நடந்தே சென்று மக்களிடம் வாக்கு சேகரித்தவர். கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைத்து தரப்பினரின் அன்பை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் எம்.ஆர்.காந்தி இன்று செருப்பு அணியாமல் வெறுங்காலுடன் சட்டப்பேரவைக்கு வந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com