இறையான்குடி வந்த காவிரி நீர்: மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.
இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்
இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த காவிரி நீரை மலர் தூவி வரவேற்ற விவசாயிகள்

இறையான்குடி தடுப்பணைக்கு வந்தடைந்த காவிரி நீரை விவசாயிகள் மலர் தூவி வரவேற்றனர்.

மேட்டூர் அணையிலிருந்து ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ம் தேதி டெல்டா மாவட்டத்துக்கு குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடுவது வழக்கம். 

இந்நிலையில் கடந்த ஆண்டும், நிகழாண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டத்துக்கு குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

 மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் தஞ்சை மாவட்டம் கல்லணையை அடைந்து அங்கிருந்து கடந்த 16-ம் தேதி நாகை, திருவாரூர் மாவட்ட பாசனத்துக்கு திறந்து விடப்பட்டது.

கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் வெண்ணாற்றிலிருந்து பிரிந்து பாண்டவையாற்றின் மூலம் நாகை மாவட்டத்தின் கடைமடை பகுதியான கீழையூர் ஒன்றியம் இறையான்குடி தடுப்பணைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.

இந்த ஆற்றின் மூலம் இறையான்குடி ,வடக்கு பனையூர், தெற்கு பனையூர், வல்லவினாயகன்கோட்டம்,களத்திடல்கரை , மகிழி உள்ளிட்ட சுமார் 4,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன.

இறையான்குடிக்கு வந்த தண்ணீரில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க மாநில தலைவர் காவிரி வே. தனபாலன் தலைமையில் விவசாயிகள் தடுப்பணை க்கு மலர் மாலை அணிவித்து, மலர் மற்றும் விதை நெல்
தூவியும் வரவேற்றனர். காவிரி நீர் வந்ததை வரவேற்கும் பொருட்டு பெண்கள் கும்மி பாட்டு பாடி வரவேற்றனர்.

இதில் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில துணை தலைவர் கே. பக்கிரிசாமி, மாநில அமைப்பாளர் ஆர்.வேதமூர்த்தி, மாவட்டச் செயலாளர் வீ.ராமசாமி, ஒன்றிய செயலாளர் ஆர்.பக்கிரிசாமி, ஊராட்சி தலைவர்களான  இறையான்குடி  த.சேகர், வடக்குப் பனையூர் இந்திராணி ராமசந்திரன், ஒன்றிய கவுன்சிலர் லென்சோயாசிவபாதம் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com