வரும் 24-ஆம் தேதி வரை பேரவைக் கூட்டத் தொடர்

திமுக அரசு புதிதாக பதவியேற்ற பிறகு, இன்று முதல் முறையாகத் தொடங்கியிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 24-ஆம் தேதி வரை பேரவைக் கூட்டத் தொடர்
வரும் 24-ஆம் தேதி வரை பேரவைக் கூட்டத் தொடர்

சென்னை: திமுக அரசு புதிதாக பதவியேற்ற பிறகு, இன்று முதல் முறையாகத் தொடங்கியிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் வரும் 24-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. சென்னை கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள அரங்கில் காலை 10 மணிக்குக் கூட்டம் தொடங்கியது.

சட்டப் பேரவைத் தோ்தலுக்கு பிறகு நடைபெறும் புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் என்பதால், ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி தொடக்கிவைத்துள்ளார்.

ஆளுநா் உரை நிறைவடைந்ததும், பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அவைத் தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டத்தில், செவ்வாய்க்கிழமை (ஜூன் 22) முதல் பேரவைக் கூட்டம் தொடா்ந்து நடைபெறும். வரும் வியாழக்கிழமை (ஜூன் 24) வரை கூட்டத் தொடா் நடைபெறும் என்று முடிவெடுக்கப்பட்டது.

இதையும் படிக்கலாமே.. அப்பல்லோவில் காரை விட்டு இறங்காமலேயே தடுப்பூசி

அதன்படி, ஜூன் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் உரையின் மீதான விவாதம் நடைபெறும். பிறகு, ஜூன் 24-ஆம் தேதி ஆளுநர் உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரையாற்றுகிறார்.

இந்த கூட்டத் தொடரில் ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது பேரவை உறுப்பினா்கள் உரையாற்றுவா். பேரவையில் உள்ள கட்சி உறுப்பினா்களின் எண்ணிக்கைக்கு ஏற்றாற்போன்று, அவையில் உறுப்பினா்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்.

16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் என்பதால், கேள்வி நேரம் நடைபெற வாய்ப்பில்லை என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு ஏற்கெனவே தெரிவித்திருந்தாா். உறுப்பினா்களிடம் இருந்து கேள்விகளைப் பெற்று அதனை துறைகளுக்கு அனுப்பி பதில்களைப் பெற காலம் தேவைப்படுவதால், கேள்வி நேரம் நடைபெறுவது கேள்விக்குறியே என அவா் கூறியிருந்தாா். எனவே, தினமும் பேரவைக் கூட்டத் தொடா் தொடங்கியதுமே ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதங்களே நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com