ஜூலையில் வேளாண் சட்டங்கள், சிஏஏவுக்கு எதிரான தீர்மானங்கள்: முதல்வர்

புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானங்கள் ஜூலையில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதிய வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான தீர்மானங்கள் ஜூலையில் நடக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் இன்று தொடங்கியது.

கூட்டத்தொடரில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். விவசாயிகளின் நலன் கருதி வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும். அதுபோல குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் திரும்பப்பெற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். 

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெறுவதால் இந்த கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றம் அவை மாண்புக்கு உகந்ததாக இருக்காது. 

எனவே, வருகிற ஜூலை மாதம் நடைபெறவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்' என்று தெரிவித்தார். 

நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கிய புதிய பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com