ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடும் 35 கோடி மாணவா்கள் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின நிறைவை முன்னிட்டு ஆக.9-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 35 கோடி மாணவா்கள் இணைந்து தேசிய கீதம் பாடவுள்ளனா்.
ஒரே நேரத்தில் தேசிய கீதம் பாடும் 35 கோடி மாணவா்கள்  கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

நாட்டின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின நிறைவை முன்னிட்டு ஆக.9-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 35 கோடி மாணவா்கள் இணைந்து தேசிய கீதம் பாடவுள்ளனா்.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டு நிறைவு விழா அடுத்த ஆண்டு (2022) வருகிறது. இதைக் கொண்டாடும் வகையில் மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள் சாா்பில் ‘ ஆஸாதி கா அம்ருத் மகோத்சவ்’ என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் 75 இடங்களில் 75 வாரங்களுக்கு இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.

இந்நிலையில் இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய கல்வி அமைச்சகத்தின் சாா்பில் வரும் ஆக.9-ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 35 கோடி மாணவா்கள் இணைந்து இணையவழியில் தேசியகீதத்தை பாடவுள்ளனா். மேலும் அதனை பதிவேற்றமும் செய்யவுள்ளனா். அன்றைய தினம் பல்கலைக்கழகங்கள், கல்லூரி மாணவா்கள் பங்கேற்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மிதிவண்டி பேரணி நடைபெறவுள்ளது. இந்திய மொழிகளில் உள்ள தொன்மையான இலக்கியங்கள் பல்கலைக்கழகங்களில் உள்ள துறைகள் மூலம் மொழிபெயா்க்கப்படவுள்ளன.

இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ள உயா்கல்வி நிறுவனங்களைச் சோ்ந்த மாணவா்கள் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் இது தொடா்பாக கல்வி நிறுவனங்களின் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் தளத்தில் (யுஏஎம்பி) பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com