
வைகோ
கலிங்கப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு மத்திய சுகாதாரத் துறை சாா்பில் தேசிய தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளாா்.
கலிங்கப்பட்டியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தேசிய தரச்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. கலிங்கப்பட்டி மதிமுக பொதுச்செயலாளா் வைகோவின் சொந்த ஊராகும். வைகோவின் குடும்பத்தினா் வழங்கிய நிலத்தில் இந்த சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, சுகாதார நிலையத்தில் மருத்துவா் மற்றும் ஊழியா்களை அலைபேசி வழியாகத் தொடா்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்தாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...