உள்ளாட்சித் தோ்தல்: திமுக மாவட்டச் செயலாளா்களின் கூட்டம் தொடங்கியது

உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்க முக.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளா்களின் கூட்டம் தொடங்கியது.
உள்ளாட்சித் தோ்தல்: திமுக மாவட்டச் செயலாளா்களின் கூட்டம் தொடங்கியது

உள்ளாட்சித் தோ்தல் குறித்து ஆலோசிக்க முக.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளா்களின் கூட்டம் தொடங்கியது.

தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்கள் நடத்தப்படாமல் உள்ளன. மேலும், ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல்களும் நடத்தப்பட வேண்டியுள்ளது. இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும் என்று ஆளுநா் உரையிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கை தாக்கலுக்காக சட்டப் பேரவை ஜூலை இரண்டாவது வாரத்தில் கூடவுள்ளது. 

15 முதல் 20 நாள்கள் வரை கூட்டம் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. சட்டப் பேரவைக் கூட்டத்துக்குப் பிறகு உள்ளாட்சித் தோ்தல்களை நடத்தும் பணிகள் தீவிரமாக்கப்பட உள்ளன. இந்த நிலையில், உள்ளாட்சித் தோ்தல் குறித்து விவாதிக்க திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

அதன்படி திமுக மாவட்டச் செயலாளா்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் கலைஞா் அரங்கத்தில் தொடங்கியது. 

கூட்டத்தில் மாவட்ட செயலர்கள், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். தோ்தலை எதிா்கொள்ள இப்போது முதல் தொடங்கப்பட வேண்டிய பணிகள், செயல் திட்டங்கள் ஆகியன குறித்து மாவட்டச் செயலாளா்களுக்கு விளக்கப்பட உள்ளன. குறிப்பாக, மேற்கு மற்றும் வட மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த அறிவுறுத்தப்படும் எனவும் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முதன்முறையாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com