சுற்றுலாத் தலங்களுக்கு தடை நீட்டிப்பு

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெறிச்சோடிக் காணப்படும் உதகை அரசினா் ரோஜா பூங்கா.
வெறிச்சோடிக் காணப்படும் உதகை அரசினா் ரோஜா பூங்கா.

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களுக்கான தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.

கரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருந்ததன் காரணமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு சில தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு வந்தது. தற்போது நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.

இந்நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 5ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீட்டிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இருப்பினும், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் பகுதிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. மேலும், அவசர காரணங்களுக்காக பயணிக்க தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து இ-பாஸ் பெற்று பயணிக்க அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com