நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடு; நீட் தேர்வு ரத்து தீர்மானம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படாத வகையில் இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்


சென்னை: நீட் தேர்வு வேண்டாம் என்பது தான் திமுக அரசின் நிலைப்பாடு; நீட் தேர்வு ரத்து தீர்மானம் உச்ச நீதிமன்றத்தால் நிராகரிக்கப்படாத வகையில் இருக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்,  “தமிழ்நாட்டில் நீட் தேர்வு கூடாது என்பது தான் திமுக அரசின் நிலைபாடு. கடந்த கால திமுக ஆட்சியில் அனந்த கிருஷ்ணன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு நுழைவுத் தேர்வு தடுக்கப்பட்டது. தற்போது நீட்தேர்வு பாதிப்பு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருகிறது. அந்த குழு சமர்ப்பிக்கும் அறிக்கையின் படி, பேரவையில் நீட் தேர்வு தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இந்த தீர்மானத்தை குடியரசுத்தலைவர் அல்லது உச்சநீதிமன்றமோ யாராலும் நிராகரிக்க முடியாத வகையில் இருக்கும். 

மேலும் நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெற அரசு தொடர்ச்சியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நூறு சதவீதம் நீட் தேர்வு இருக்காது. மாணவர்கள் அதை உணர்ந்துள்ளனர். கரோனா தொற்றி பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கான பிந்தைய சிகிச்சை மையத்தை முதல்வர் ஸ்டாலின் விரைவில் திறந்துவைக்க உள்ளார். கருப்பு பூஞ்சைக்காக தமிழ்நாடு முழுவதும் ஏழு ஆயிரம் படுக்கைகள் தயாராக உள்ளது.

தமிழகத்தில் மூன்றாவது அலை வராமல் தடுக்கும் பணியை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒருவேளை வந்தால் அதை எதிர்கொள்ளவும் அரசு தயாராக உள்ளது என்று மா.சுப்பிரமணியன் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com