முகப்பொலிவுக்கு 'பாதாம் எண்ணெய் மசாஜ்'

முகத்தை பளபளப்பாகவும் முகத்தில் உள்ள கருமையைப் போக்கவும் பாதாம் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. 
முகப்பொலிவுக்கு 'பாதாம் எண்ணெய் மசாஜ்'

முகத்தை பளிச்சென வைப்பதற்கு பல இயற்கை வழிமுறைகள் உள்ளன. அவ்வாறு முகத்தை பளபளப்பாகவும் முகத்தில் உள்ள கருமையைப் போக்கவும் பாதாம் எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது. 

இரவில் தூங்கும் முன் முகத்தில் பாதாம் எண்ணெய் கொண்டு முகத்தில் மசாஜ் செய்வதால் மறுநாள் காலையில் முகம் பளபளப்பாக இருக்கும். 

சிலருக்கு முகம் எப்போதும் வறண்டு காணப்படும். அவ்வாறு முகவறட்சி இருப்பவர்களுக்கும் இதனை முயற்சி செய்து பார்க்கலாம். 

இரவு தூங்கும் முன் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாகக் கழுவிவிட்டு கொஞ்சம் ரோஸ் வாட்டரை பஞ்சால் நனைத்து முகத்தை துடைத்தெடுங்கள். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும். 

இதன்பின்னர் பாதாம் எண்ணெய் சில துளிகள் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். 2 அல்லது 3 நிமிடங்கள் மசாஜ் செய்தால் போதுமானது. காலையில் வழக்கம்போல் எழுந்து முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவலாம். சோப் அல்லது பேஷ் வாஷ் கொண்டும் கழுவலாம். இவ்வாறு செய்தால் முகம் பொலிவுடன் காணப்படும். 

கண்களுக்கு கீழ் பாதாம் எண்ணெய் கொண்டு தொடர்ந்து மசாஜ் செய்யும் போது கருவளையம் வெகு விரைவில் மறைந்துவிடும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com