நாகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் 

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நாகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம்.

நாகப்பட்டினம் : பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் நாகை அவுரித்திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்கவேண்டும், கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள வரி செலுத்தாத அனைவருக்கும் தலா ரூ.7,500 நிவாரணமாக வழங்கவேண்டும் என்றக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினரும், நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான எம். செல்வராஜ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் வி.பி.நாகை மாலி (கீழ்வேளூர்)ஜெ.முகமது ஷா நவாஸ் ( நாகை) ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாகை மாவட்டப் பொருளாளர் ராமலிங்கம், ஒன்றியச் செயலாளர் கோ. பாண்டியன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்வி.சரபோஜி, சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் ஏ.பி.தமீம் அன்சாரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றியச் செயலாளர் பி.டி. பகு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச்செயலாளர் கதிர்நிலவன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

கீழ்வேளூரில்... இதேபோல், நாகை மாவட்டம், கீழ்வேளூர் கடை வீதியில், கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூர் ஒன்றியச் செயலாளர் அபுபக்கர் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.கே.நாகராஜன், விடுதலைச் சிறுத்தைகள்கட்சி நாகை மாவட்டத்துணைச் செயலாளர் பேரறிவாளன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். 50  பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com