இறைவன் மகிழ்ச்சியுடன் இருக்கும்போது பிரார்த்தனை செய்தால் அவை நிறைவேறும்: ஸ்ரீஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள்

இறைவன் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது பக்தர்கள் பிரார்த்தனை செய்தால் அவை நிறைவேறும் என்றார் ஸ்ரீசகடபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள் கூறியுள்ளார். 
பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய ஶ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள்.
பக்தர்களுக்கு அருளாசி வழங்கிய ஶ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மகா சுவாமிகள்.

இறைவன் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது பக்தர்கள் பிரார்த்தனை செய்தால் அவை நிறைவேறும் என்றார் ஸ்ரீசகடபுரம் சங்கராச்சாரியார் ஸ்ரீஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள் கூறியுள்ளார். 

நீடாமங்கலம் அருகேயுள்ள திருவோணமங்கலம் ஞானபுரியில் ஶ்ரீஜகத்குரு பதரி சங்கராச்சாரியார் ஸ்ரீஸ்ரீகிருஷ்ணாநந்த தீர்த்த மகாசுவாமிகள் துறவறம் ஏற்று ஸ்ரீவித்யா பீடத்தின் 33வது ஆச்சார்யராக அலங்கரிக்கும் 40வது பீடாரோஹண மகோத்சவம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இதனை முன்னிட்டு ஞானபுரியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசங்கடஹர மங்கலமாருதி 33 அடி உயர ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேக ,ஆராதனைகள்,1 லட்சம் வாழைப்பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஸ்ரீஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகளுக்கு சிதம்பரம், கும்பகோணம், ஆலங்குடி உள்ளிட்ட ஊர்களிலிருந்து 12 திருக்கோயில்களின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. 

ஸ்ரீசகடபுரம்பதரி சங்கராச்சாரியார்  ஸ்ரீஸ்ரீகிருஷ்ணானந்த தீர்த்த மகாசுவாமிகள் கலந்துகொண்டு அருளாசி வழங்கி பேசுகையில், 

திருவோண மங்கலம் ஞானபுரியில் 1 லட்சம் வாழைப்பழங்களால் செய்யப்பட்ட அலங்காரத்துடன் செவ்வாய்க்கிழமை பக்தர்களுக்கு அருள்பாலித்த 33 அடி உயர சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சனேயர். 
திருவோண மங்கலம் ஞானபுரியில் 1 லட்சம் வாழைப்பழங்களால் செய்யப்பட்ட அலங்காரத்துடன் செவ்வாய்க்கிழமை பக்தர்களுக்கு அருள்பாலித்த 33 அடி உயர சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சனேயர். 

புராணங்களில் ஒவ்வொரு கதையும் வேறு, வேறு விதமாகவுள்ளது. சிலருக்கு புரிகிறது. சிலருக்கு புரியாமலும் இருக்கிறது. கடினமான சாஸ்திரம், புராணங்களைச் சிரமப்பட்டுப் புரிந்து கொள்ளவேண்டும். வாழைப்பழம் சொல்லும் தத்துவமும் அதேபோல் தான் இங்கு ஆஞ்ஜனேயருக்கு வாழைப்பழத்தால் அலங்காரம் நடந்துள்ளது.  

இதன் பொருள் பக்தர்களுக்கு சுலபமாக பலனைத்தருவேன் என்பதுதான். ஆஞ்சனேநேயர் பிரதிஷ்டையாகி ஒருவருடத்தில் இப்போது தான் வாழைப்பழத்தால் அலங்காரம் நடந்துள்ளது. மூதாட்டி ஒருவர் 120 வயதானது அவருக்கு எல்லோரும் விழா எடுத்தார்கள். மூதாட்டியிடம் நீங்கள் 120 வருடங்கள் ஆரோக்கியமாக இருப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டார்கள். அதற்கு மூதாட்டி 120 வருடம் இருக்கிறேன் அதுதான் காரணம் என்றார். 

அதேபோல் தான் வாழைப்பழ அலங்காரம் ஆஞ்சனேயருக்கு எதற்கு என்றால் இறைவன் நினைத்தார் நடந்தது. அதேபோல் தான் பீடாரோகணம் ஏன் ஆச்சு என்றால் ஆஞ்சனேயருக்கு வாழைப்பழ அலங்காரம் ஆக வேண்டும் என்தற்காக எனக்கு சன்னியாசம் கிடைத்துள்ளது. வாழைப்பழத்தைத் தோலை உரித்துச் சாப்பிடுவது சுலபம். பகவானுக்கு வாழைப்பழம் அளித்தால் சுலபமாக நன்மை அடையலாம். 

பிரார்த்தனை நிறைவேறும். நமது கஷ்டம் தீரும்.குரங்குகள் வாழைப்பழத்தை தேடிச்செல்லும். மதுவனத்தை குரங்குகள் தும்சம் செய்த போது சுக்ரீவனிடம் முறையிட்டார்கள். அவருக்கு கோபம் வரவில்லை. மாறாக மகிழ்ச்சியடைந்தார். குரங்குகளுக்கு வாழைப்பழம் விசேஷமானது. வாழைப்பழ அலங்காரத்தால் ஆஞ்சனேயர் மகிழ்ச்சியடைகிறார். இறைவன் மகிழ்ச்சியடையும் போது பிரார்த்தனை செய்தால் அதற்குரிய நல்லபலனை அடையலாம் என்றார். 

சிவாச்சாரியார்கள், விவசாயிகள் மகாசுவாமிகளால் கௌரவிக்கப்பட்டனர். விழாவில் ஸ்ரீசகடபுரம் ஸ்ரீவித்யா பீடத்தின் ஸ்ரீகார்யம் சந்திரமெளிஸீஸ்வரர், கோயில் ஸ்தாபகர் ரமணி அண்ணா மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com