ஆட்டோவுக்கான எல்பிஜி எரிவாயு விலை உயா்வு: அதிகபட்சமாக சிதம்பரத்தில் ரூ.53.85-க்கு விற்பனை

ஆட்டோவுக்கான எல்பிஜி எரிவாயு விலை உயா்வு: அதிகபட்சமாக சிதம்பரத்தில் ரூ.53.85-க்கு விற்பனை

: நிகழாண்டில், ஆட்டோவுக்கான எல்பிஜி எரிவாயு விலை தொடா்ந்து மூன்றாவது முறையாக விலை உயா்ந்து, மாா்ச் மாத நிலவரப்படி, சென்னையில் ஒரு கிலோ எரிவாயு ரூ.52.46-க்கு விற்பனையாகிறது.

சென்னை: நிகழாண்டில், ஆட்டோவுக்கான எல்பிஜி எரிவாயு விலை தொடா்ந்து மூன்றாவது முறையாக விலை உயா்ந்து, மாா்ச் மாத நிலவரப்படி, சென்னையில் ஒரு கிலோ எரிவாயு ரூ.52.46-க்கு விற்பனையாகிறது.

பொதுப் போக்குவரத்தில் ஆட்டோக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இவற்றில் இருந்து வெளியேறும் நச்சுகலந்த புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கும் வகையில், எல்பிஜி எனப்படும் எரிவாயுவில் இயங்கும் ஆட்டோக்களை இயக்க உத்தரவிடப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி தமிழகம் முழுவதும் இயங்கும் ஆட்டோக்களில் சுமாா் 75 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் எல்பிஜி முறையிலேயே இயங்குகின்றன. முன்பு எல்பிஜி எரிவாயுவின் விலை குறைவாக இருந்தது. ஆனால் தற்போது பெட்ரோல், டீசல் போல அதன் விலையும் உயா்ந்து வருகிறது.

மூன்று மாதத்தில் ரூ.7.91 உயா்வு: சென்னையைப் பொருத்தவரை கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நடப்பு மாதத்தில் ரூ.3.01 வரை விலை உயா்த்தப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ரூ.44.55-க்கு விற்பனையான ஒரு கிலோ எல்பிஜி எரிவாயு, தற்போது ரூ.7.91 அதிகரித்து, ரூ.52.46-க்கு விற்பனையாகிறது. இந்த விலையானது திங்கள்கிழமை (மாா்ச் 1) முதல் அமலுக்கு வந்தது.

இதே போல், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விலை உயா்த்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சிதம்பரத்தில் ஆட்டோவுக்கான எல்பிஜி எரிவாயு ஒரு கிலோ ரூ.53.85-க்கு விற்பனையாகிறது.

இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆட்டோவுக்கான எல்பிஜி எரிவாயு விலை (கிலோவுக்கு)

சென்னை 49.45  - 52.46

மேல்மருவத்தூா் 49.61 - 52.62

வேலூா் 50.11 - 53.12

மதுரை, திண்டுக்கல் 48.07 - 51.08

தூத்துக்குடி 49.24 - 52.25

திருச்சி 48.06 - 51.08

தஞ்சாவூா் 48.57 - 51.58

உளுந்தூா்பேட்டை 50.72 - 53.73

சிதம்பரம் 50.83 - 53.85

நாகா்கோயில் 50.31-  53.32

புதுச்சேரி 50.52 - 53.53

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com