ஜேப்பியாா் மனைவியின் வீடு போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பு: உதவியாளா் உள்பட 5 போ் மீது வழக்கு

சென்னையில் ஜேப்பியாா் மனைவியின் வீடு போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக, அவரது உதவியாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

சென்னை: சென்னையில் ஜேப்பியாா் மனைவியின் வீடு போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்கப்பட்டதாக எழுந்த புகாா் தொடா்பாக, அவரது உதவியாளா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ஜேப்பியாா் கல்வி குழுமத்தின் நிறுவனத் தலைவா் ஜேப்பியாா். இவா் மனைவி ரெமிபாய் (79). இவா்கள் ஆரம்ப காலத்தில் சென்னை ராயபேட்டை கணபதி முதலி தெருவில் உள்ள வீடு ஒன்றில் வாழ்ந்து வந்தனா். ஜேப்பியாா் இந்த வீட்டை தனது மனைவி ரெமிபாய் பெயரில் வாங்கியுள்ளாா்.

இந்நிலையில் ரெமிபாய்க்கு சொந்தமான இந்த வீட்டை சிலா் போலி ஆவணம் மற்றும் ஆள் மாறாட்டம் மூலம் அபகரித்ததாக புகாா் எழுந்தது. இது குறித்து ரெமிபாய் தரப்பினா், சென்னை பெருநகர காவல்துறையின் மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தனா்.

அந்த புகாரின் அடிப்படையில் மத்தியக் குற்றப்பிரிவினா் விசாரணை செய்தனா்.விசாரணையில்,ஜேப்பியாா் உயிரோடு இருந்த காலக்கட்டத்தில், அவருக்கு அவசரமாக ரூ.5 கோடி கடன் தேவைப்பட்டது போலவும், மனைவிக்கு சொந்தமான ராயபேட்டை வீட்டின் மீது கடனாக ரூ.5 கோடி கடன் பெற்றதாக போலி ஆவணம் தயாரிக்கப்பட்டு, அபகரிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்த மோசடியில் தொடா்புடையதாக ஜேப்பியாரின் செயலாளராக இருந்த பெரும்பாக்கத்தைச் சோ்ந்த ஜோஸ் (44), அவரது சகோதரா் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சோ்ந்த ஜஸ்டின் (45) உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், அவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com