திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து கருத்துக் கேட்க காங்கிரஸ் முடிவு?

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் காங்கிரஸ் நாளை கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து கருத்துக் கேட்க காங்கிரஸ் முடிவு?
திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து கருத்துக் கேட்க காங்கிரஸ் முடிவு?


சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடிப்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் காங்கிரஸ் நாளை கருத்துக் கேட்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 30 தொகுதிகளைக் கேட்பதாகவும், ஆனால் 24 தொகுதிகளை மட்டுமே அளிக்க திமுக தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக - காங்கிரஸ் இடையே ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த நிலையில், சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைமை சார்பில் காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குண்டுராவ் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் வீரப்ப மொய்லி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோரும் பங்கேற்கிறார்கள்.

திமுக ஒதுக்கும் குறைவான தொகுதிகளை ஏற்றுக் கொண்டு கூட்டணியில் நீடிக்கலாமா? அல்லது வேண்டாடா? என்பது குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் நாளை காங்கிரஸ் கட்சித் தலைமை ஆலோசனை நடத்தும் என்று கூறப்படுகிறது.

காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் அளிக்கும் கருத்துகளைக் கேட்டு திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து முடிவு செய்யப்படலாம் என்று தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com