கூத்தாநல்லூர்: பொதக்குடி மேலப் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடி மேலப்பள்ளி வாசல் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். 
கூத்தாநல்லூர்: பொதக்குடி மேலப் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
கூத்தாநல்லூர்: பொதக்குடி மேலப் பள்ளிவாசல் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டம், பொதக்குடி மேலப்பள்ளி வாசல் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். 

பதவியேற்பு விழா, 107 ஆண்டு பழமையான பொதக்குடி மேலப்பள்ளி வாசலில் நடைபெற்றது. விழாவிற்கு, பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை, அறப்பணிச் சங்கத் தலைவர் எஸ்.ஏ. மஹதூம் மைதீன் தலைமை வகித்தார். மேலப்பள்ளிவாசல் இமாம் அபுல் ஹசன் ஷாதலி ஹஜ்ரத் கிராஅத் ஓதினார். முத்தவல்லிகள் பெரியப்பள்ளி பி.எம்.ஷாஜஹான், பாத்திமா பள்ளி பி.எம்.டி.ஜெய்னுல் ஆபிதீன், புதுமனைப் பள்ளி வாசல் எஸ்.டி.ஏ. ஜியாவுதீன், மேலப்பள்ளி முன்னாள் முத்தவல்லி பி.எம்.ஏ.குத்புதீன், ஜன்னத்துல் பிர்தவுஸ் செயலாளர் பி.எம்.அமானுல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலப்பள்ளி வாசலின் புதிய தலைவர் ஏ.எம்.லியாக்கத் அலி, செயலாளர் எம்.எஸ்.ஏ அப்துல் ரஷீது, பொருளாளர் பி.எம்.ஏ.ஷேக் ஜெஹபர்தீன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளாகப் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து, நகரின் முக்கியஸ்தர்கள் எஸ்.ஏ.சேக் அலாவுதீன், ஏ.பி.எம்.அன்வர்தீன் உள்ளிட்ட பலர் பேசியது.கடந்த 1914 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தப் பள்ளி வாசல், படிப்படியாக உயர்ந்து இன்று 107 ஆம் ஆண்டை அடைந்துள்ள இப்பள்ளி வாசலுக்கு என தனிப் பெருமை உள்ளது. இந்தப் பள்ளி வாசலுக்கு என ஒரு கண்ணியத்தை, அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறார். இங்குள்ள அனைவருமே எந்த தவறும் செய்யாத உன்னதமானவர்கள். உத்தமமானவர்கள்.

திருக்குர்ஆனில் சொல்லியுள்ளது படி, ஒவ்வொருவரும் பொறுமையாக இருக்க வேண்டும். மற்றவர்கள் மீது பேரன்பு செலுத்துபவர்களாக இருக்க வேண்டும். உண்மையைப் பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும். நம்மால் முடிந்த அளவுக்கு தர்மம் செய்யக் கூடியவர்களாக இருக்க வேண்டும். இவைகள் இருக்கும் ஒருவர் அல்லாஹ்விற்கு நெருக்கமாக இருப்பவர்களாக மாற்றப்படுவார்கள். ஜாதி,மத பேதமில்லாமல் அனைவரும் ஒற்றுமையாக வாழ்வோம் என்றனர். விழா ஏற்பாடுகளை, பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கச் செயலாளர் எம்.எம்.ரஃப் யுதீன் மற்றும் நிர்வாகிகள் கவனிதனர்.

நிகழ்வில், ஜன்னத்துல் பிர்தௌஸ் பள்ளி இமாம் ஹாஜா மைதீன் ஹஜ்ரத், பாத்திமா பள்ளிவாசல் இமாம் முகம்மது கெளஸ்கனி ஹஜ்ரத், புதுமனைப் பள்ளி வாசல் இமாம் முஹம்மது மெளலானா ஹஜ்ரத் 
உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக, மேலப்பள்ளி வாசல் தலைவர் ஏ.எம்.லியாக்கத் அலி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com