கோவை கோனியம்மன் கோயிலில் தேரோட்டம்

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.
கோனியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட திருவிழா
கோனியம்மன் கோயிலில் நடைபெற்ற தேரோட்ட திருவிழா

கோவையின் காவல் தெய்வம் என்று போற்றப்படும் கோனியம்மன் கோவில் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். டவுன்ஹால் பகுதியில் அமைந்துள்ள கோனியம்மன் கோவில் கோவை மாவட்ட காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. இக்கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் சுபமுகூர்த்த நாள்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வாடிக்கையான ஒன்று. 

தேரோட்ட நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோட்டம் துவங்கியது முதல் பக்தர்கள் தேர் மீது உப்புகளை வீசி தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். தேர்த் திருவிழாவை முன்னிட்டு ராஜவீதியில் உள்ள வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மோர், தர்பூசனி, பெப்சி, உணவு பொட்டலங்களை இலவசமாக வழங்கப்பட்டது.

மதநல்லிணக்கத்தை பறைசாட்டும் விதமாக அத்தர் ஜமாத் பள்ளிவாசல் முன் இஸ்லாமியர்கள் பக்தர்களுக்கு குடிநீர் பாட்டில்களை இலவசமாக வழங்கினர். தேர்நிலை திடலில் துவங்கி ராஜவீதி, ஒப்பணகார வீதி, ஐந்து முக்கு வழியாக முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

கடந்த 16ம் தேதி பூச்சாட்டுடனும் 23 தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி கொடியேற்றம், திருவிளக்கு வழிபாடு, திருக்கல்யாணத்திற்குப் பிறகு இன்று தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. ராஜவீதி தேர்நிலை திடலில் துவங்கிய தேரோட்டம் ஒப்பணகார வீதி, வைசியால் வீதி வழியாக மீண்டும் தேர்நிலை திடலை வந்தடைந்தது. 

தேரோட்டத்தை முன்னிட்டு கோவை ராஜவீதி, பெரிய கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு நூற்றுக்கணக்கான காவல்துறை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com