திமுகவுடன் இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை புறக்கணித்த விசிக!

சென்னையில் புதனன்று நடைபெறவிருந்த திமுகவுடன் இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் புதனன்று நடைபெறவிருந்த திமுகவுடன் இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் புதனன்று நடைபெறவிருந்த திமுகவுடன் இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை: சென்னையில் புதனன்று நடைபெறவிருந்த திமுகவுடன் இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத்திற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பினை வெளியிட்டது. அதையடுத்து கட்சிகள் கூட்டணியை இறுதி செய்தல், தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்களில் தீவிரமாக செயல்பட ஆரம்பித்து விட்டன.

அதன்படி திமுக கூட்டணியில் போட்டியிடும் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் காங்கிரஸ் கட்சியுடன் புதனன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் குழப்பம் நிலவி வருகிறது.

அதேசமயம் திங்களன்று முதல்கட்ட பேச்சுவார்த்தை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ‘திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெறுகிறது என்றும், எந்தெந்த தொகுதிகள், எந்த சின்னத்தில் போட்டி குறித்து என்ற தகவல்கள் குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் திமுகவுடன் இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரட்டை இலக்க தொகுதிகளை விசிக எதிர்பார்க்கும் நிலையில் திமுக தரப்பு அதற்கு முன்வராததால் அதிருப்தி என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com