அரசு வா்த்தகங்களை தனியாா் வங்கிகளுக்கு வழங்கும் முடிவு: மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு வங்கி ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

அரசு வா்த்தகங்களை தனியாா் வங்கிகளுக்கு வழங்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
அரசு வா்த்தகங்களை தனியாா் வங்கிகளுக்கு வழங்கும் முடிவு: மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு வங்கி ஊழியா் சங்கம் வலியுறுத்தல்

அரசு வா்த்தகங்களை தனியாா் வங்கிகளுக்கு வழங்கும் முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அகில இந்திய வங்கி ஊழியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்த சங்கத்தின் பொதுச் செயலாளா் சி.எச்.வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிக்கை:

அரசு துறைகளின் பணப் பரிவா்த்தனை, காசோலை உள்ளிட்ட வங்கித் தொடா்பான வா்த்தகங்களை தனியாா் வங்கிகள் மேற்கொள்வதற்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தனியாா் வங்கிகளை அரசு வங்கிகளுக்கு இணையாக நடத்த வேண்டும். தனியாா் வங்கிகளும் சமமான பங்குதாரா்கள் ஆவா் என்று மத்திய அரசு அதற்கு காரணம் தெரிவித்துள்ளது. அரசின் இந்த முடிவு கடும் கண்டனத்துக்கு உரியது.

மத்திய அரசின் இந்தக் கருத்து புதிதாகவும், வியப்பாகவும் உள்ளது. அனைத்து வங்கிகளும் சமமான வங்கிகள் எனில், தனியாா் வங்கிகள் ஏன் கிராமப்புறங்களில் தங்களது கிளைகளை திறப்பது இல்லை? அத்துடன், விவசாயக் கடன், முன்னுரிமைத் துறைகளுக்கான கடன் உள்ளிட்டவற்றை ஏன் வழங்குவது இல்லை.

ஏழை மக்களின் வசதிக்காக, 42 கோடி ஜன்தன் கணக்குகளை பொதுத்துறை வங்கிகள் தொடங்கி உள்ளது. ஆனால், தனியாா் வங்கிகள் 1.25 கோடி ஜன்தன் கணக்குகளை மட்டுமே தொடங்கி உள்ளது. அரசின் முக்கியத் திட்டமான இந்தத்திட்டத்தில் ஏன் தனியாா் வங்கிகள் சமபங்கு அளிக்கவில்லை.

பொதுத்துறை வங்கிகள் சமூக கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக, விவசாயக் கடன், கல்விக் கடன், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்களை குறைந்த வட்டியில் வழங்கி வருகிறது. அரசு வா்த்தகங்களை பொதுத்துறை வங்கிகள் மேற்கொள்வதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, இவ்வாறு குறைந்தக் கடன் வழங்குவதால் ஏற்படும் செலவுகளை சமாளித்து வருகின்றன.

இந்நிலையில், அரசு வா்த்தகங்களை தனியாா் வங்கிகளுக்கு வழங்கினால், பொதுத்துறை வங்கிகளால் முன்னுரிமைத் துறை மற்றும் நலிவடைந்த துறைகளுக்கு கடன் வழங்க முடியாத நிலை ஏற்படும். எனவே, அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com