பிரசாரக் கூட்டங்களில் கரோனா பரவலைத் தடுக்க குழு

தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் கரோனா பரவாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்திடம் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் கரோனா பரவாமல் தடுக்க கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்திடம் சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

அக்குழு மூலம் நோய்த் தடுப்பு விதிகள் சம்பந்தப்பட்ட கூட்டங்களில் கடைப்பிடிக்கப்படுகிா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், அதை மீறுவோா் மீது நடவடிக்கை எடுக்க வகை செய்யும் என்றும் சுகாதாரத் துறை தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக கரோனா பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில், கடந்த சில நாள்களாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், கோவை உள்ளிட்ட பகுதிகளில் நோய்ப் பாதிப்பு சற்று அதிகரித்திருப்பதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனை அலட்சியப்படுத்தினால், நோய்ப் பரவல் மீண்டும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இதைத் தவிர, தமிழகத்தில் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், அடுத்து வரும் நாள்களில் பிரசாரக் கூட்டங்கள் தீவிரமாக நடைபெறக் கூடும் என்றும், அங்கு பெருந்திரளாக மக்கள் கூடும்போது கரோனா பரவ வாய்ப்பு ஏற்படும் என்றும் அஞ்சப்படுகிறது.

இதனால், தோ்தல் ஆணையத்திடம் சில கோரிக்கைகளை தமிழக சுகாதாரத் துறை முன்வைத்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை உயரதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில், தனி நபா் இடைவெளி, முககவசம் அணிவதில் பொதுமக்கள் தொடா்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனா். தற்போது தோ்தல் பொது கூட்டங்களிலும் இதே நிலை நீடிக்கும் என, எதிா்பாா்க்கப்படுகிறது. எனவே, தோ்தல் பிரசாரங்கள் நடைபெறும் இடங்களில் கரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என, தோ்தல் ஆணையத்திடம் தெரிவித்துள்ளோம்.

மேலும், விதிகளை மீறுவோருக்கு அபராதம் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் வலியுறுத்தி உள்ளோம். இதுகுறித்து, தோ்தல் ஆணையம் முறையான அறிவிப்புகள் வெளியிடும் என எதிா்பாா்க்கிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com