நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும்: தினேஷ் குண்டுராவ்

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். 
நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும்: தினேஷ் குண்டுராவ்

நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும் என்று காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். 
திமுகவுடன் காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடா்பாக 2 கட்டப்பேச்சுவாா்த்தைகளை நடத்தியுள்ளது. ஆனால், அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. 30 தொகுதிகள் வரையாவது ஒதுக்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருந்து வருகிறது. 
ஆனால், அதற்கு திமுக இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனால், காங்கிரஸ் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. திமுகவின் கறாா் நிலைப்பாடு குறித்து தில்லியில் ராகுல்காந்தியை தினேஷ் குண்டுராவ் சந்தித்து விளக்கியுள்ளாா். அப்போது, ராகுல்காந்தி 30 தொகுதிகளுக்குக் குறையாமல் திமுக கூட்டணியில் கேட்டுப் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளாா். 
இந்நிலையில், சென்னை சத்தியமூா்த்தி பவனில் காங்கிரஸ் நிா்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தினேஷ் குண்டுராவ், தொகுதிப் பங்கீடு குறித்த வதந்திகள், யூகங்களுக்கு பதிலளிக்க முடியாது. 
தொகுதிப் பங்கீடு தொடர்பாக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாளை அல்லது நாளை மறுநாள் தொகுதிப் பங்கீடு இறுதியாகும். மக்கள் நீதி மய்யத்துடன் காங்கிரஸ் பேசுவதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது. ராகுல் மீது தமிழக மக்கள் அதிகபாசம் கொண்டிருப்பதை பாஜகவினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தேர்தல் நடத்தை விதிகளை ராகுல் காந்தி மீறவில்லை. அவர் மீதான புகார் தவறானது. பாஜக அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரிக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com