கரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க ஏற்பாடு: சத்யபிரத சாகு

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்குப்பதிவு அன்று கடைசி ஒரு மணி நேரத்தில் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களிக்கலாம்
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு .
தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு .


சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின் போது, கரோனா தொற்று பாதிக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்குப்பதிவு அன்று கடைசி ஒரு மணி நேரத்தில் பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களிக்கலாம் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வாக்களிக்க உரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் அனுமதியுடன், வாக்குப்பதிவு அன்று கடைசி ஒரு மணி நேரத்தில் முழு பாதுகாப்பு கவச உடையுடன் வந்து வாக்களிக்கலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார். 

தமிழகத்தில் 12.91 லட்சம் மூத்த குடிமக்களுக்கு தபால் வசதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், தபால் வாக்கு வசதி பெறுவதற்கு 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போதே விண்ணப்பிக்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com