தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பில்லை: வைகோ

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீடு செய்வதில் இழுபறி நீடித்து வருவதால், கட்சி நிர்வாகிகளுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவசர ஆலோசனை நடத்தினார்.

சென்னை தாயகத்தில் நடைபெற்ற ஆலோசனையில் மதிமுக துணைப் பொதுச்செயலாளா் மல்லை சத்யா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு இந்த ஆலோசனை நடைபெற்றது. பின்னர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது, ''தொகுதியை இறுதி செய்வது தொடர்பாக திமுகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெறும். தொகுதிகளை பங்கிடுவது தொடர்பாக பேச்சுவார்த்தை சென்றுகொண்டுள்ளது. 3-ம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு திமுக இன்னும் அழைக்கவில்லை.

விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக கெளரவமாக நடத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் 3-வது அணி அமைய வாய்ப்பு குறைவு. கமல்ஹாசன் தலைமையிலான 3வது அணிக்கு மதிமுக செல்ல வாய்ப்பில்லை'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com