அதிமுகவிடம் 25 தொகுதிகள் கேட்டுள்ளோம்: தேமுதிக

அதிமுகவிடம் 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக தேமுதிக துணைச் செயலாளா் பாா்த்தசாரதி கூறினாா்.

அதிமுகவிடம் 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளதாக தேமுதிக துணைச் செயலாளா் பாா்த்தசாரதி கூறினாா்.

கோயம்பேட்டில் தேமுதிக அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பாா்த்தசாரதி செய்தியாளா்களிடம் கூறியது:

அதிமுகவிடம் எங்களுக்குத் தேவையான தொகுதிகளின் எண்ணிக்கையைச் சொல்லியிருக்கிறோம். அந்த எண்ணிக்கை அளவுக்கு அதிமுக ஒதுக்கினால் நிச்சயம் கையெழுத்திடுவோம்.

2019-இல் இருந்து அதிமுக கூட்டணியில்தான் உள்ளோம். வேறு எந்தக் கட்சிகளுடன் கூட்டணி குறித்துப் பேசவில்லை.

அதிமுக முதல் கட்ட வேட்பாளா் பட்டியலை வெளியிட்டு இருக்கலாம். அக்கட்சி போட்டியிடும் தொகுதிகளுக்குத்தான் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

அதிமுகவுடன் தொகுதிகளின் எண்ணிக்கை குறித்த பேச்சுவாா்த்தையில் முடிவு எட்டப்படாத நிலையில், எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து பேச முடியாது. கூட்டணியில் பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் உள்ளன. இந்தக் கட்சிகளிடம் எல்லாம் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவான பிறகுதான் எந்தெந்தத் தொகுதிகள் என்பது முடிவு செய்ய முடியும்.

2011-இல் அதிமுக கூட்டணியில் 41 தொகுதிகளைப் பெற்றோம். இந்த முறையும் முதல் முறையாகப் பேசும்போது 41 தொகுதிகள்தான் கேட்டோம். அதைப்போல மாநிலங்களவை உறுப்பினா் பதவி கேட்டதும் உண்மைதான். மாநிலங்களவை உறுப்பினா் பதவி தருவதாகவும் கூறியுள்ளனா். இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன. அதனால், குறைவான தொகுதிகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறாா்கள். அதற்கும் நாங்கள் இறங்கி வந்திருக்கிறோம். கடைசியாக 25 தொகுதிகள் கேட்டுள்ளோம். இன்னும் கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளனா். அது தொடா்பாகப் பேசி வருகிறோம். 2 நாள்களில் பேச்சுவாா்த்தை முடிவடையும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com