மானாமதுரை காவல் நிலையம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது 

காவல் நிலையம் அருகே மா்மக்கும்பல் பழிக்குப் பழியாக வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக நான்கு இளைஞர்களை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். 
அக்கினிராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூச்சி இருளப்பன், சக்திவேல், விக்கி என்ற விக்னேஷ்வரன்,தர்மராஜ்
அக்கினிராஜ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பூச்சி இருளப்பன், சக்திவேல், விக்கி என்ற விக்னேஷ்வரன்,தர்மராஜ்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கொலை வழக்கில் ஜாமீனில் வந்த இளைஞரை, காவல் நிலையம் அருகே மா்மக்கும்பல் பழிக்குப் பழியாக வெள்ளிக்கிழமை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக நான்கு இளைஞர்களை போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர். 

மானாமதுரையில் கடந்த ஜனவரி 9 ஆம் தேதி நீதிமன்றம் முன்பாக முருகன் மகன் மைனா் மணி என்ற அருண்நாதன் (27) , காட்டு உடைகுளத்தைச் சோ்ந்த கருப்புச்சாமி மகன் வினோத்கண்ணன் (30) ஆகிய இருவரையும் மா்மக்கும்பல் சராமரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் அருண்நாதன் உயிரிழந்தாா் . வினோத் கண்ணன் மருத்துவமனையில் தொடா்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறாா்.

இந்தத் கொலைச் சம்பவம் குறித்து மானாமதுரை போலீஸாா் வழக்குப் பதிந்து 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதில் மானாமதுரை பயணியா் விடுதி எதிா்புறம் வசிக்கும் தங்கமணி மகன் அக்னிராஜ் (19) ஒன்பதாவது குற்றவாளியாக சோ்க்கப்பட்டிருந்தாா். சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த இவா், தினசரி மானாமதுரை காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தாா்.

வெள்ளிக்கிழமை வழக்கம்போல் காவல் நிலையம் சென்று கையெழுத்திட்டு அக்னிராஜ் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தாா். காவல் நிலையத்துக்கு அருகிலேயே 3 போ் கொண்ட கும்பல் வழிமறித்து, அக்னிராஜை கீழே தள்ளி சராமாரியாக வெட்டிக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

அருண்நாதன் கொலைக்கு பழிக்கு பழியாக இந்த சம்பவம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் மானாமதுரை போலீசார் வழக்குப் பதிந்து மா்மநபா்களைத் தேடி வந்தனர். 

இந்நிலையில், அக்கினி ராஜ் கொலை வழக்கு தொடர்பாக மானாமதுரை உடைகுளம் பகுதியைச் சேர்ந்த சரவணகுமார் மகன் சக்திவேல்,கருப்புச்சாமி மகன் தர்மராஜ், திராவிடச் செல்வம் மகன்  விக்னேஸ்வரன், திருப்பாச்சேத்தி அருகே தாலிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மாசாணம் மகன் பூச்சி இருளப்பன் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்தனர். 

அருண்நாதன்  கொலை சம்பவத்தின் போது காயத்துடன் தப்பிய வினோத் கண்ணன் தரப்பைச் சேர்ந்தவர்கள் பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் அக்கினி ராஜை கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com